இலங்கை பூராகவும் 160 மெகாவாட் / 640 மெகாவாட் மணிநேர வலுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் / 40 மெகாவாட் மணிநேர மின்கல வலுசக்தி களஞ்சிய கட்டமைப்பை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் இன்று (2026.09.18) முற்பகல் இடம் பெற்றது.
வலுசக்தி சேமிப்பு மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது தற்போதைய வலுசக்தி துறையில் உள்ள மிகச்சிறப்பான மற்றும் மிகவும் செயற்திறனுள்ள தொழில்நுட்பமாகும்.
பகல் வேளையில் உற்பத்தியாகும் மேலதிக சக்தியை சேமித்து, இரவு வேளையில் மின்சாரத் தேவை அதிகமாகும் சந்தர்ப்பத்தில் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்குவது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குதல் மற்றும் செயற்திறனான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை நனவாக்கும் ஒரு சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் பாராட்டியதுடன், இதற்கு பங்களிப்பு வழங்கிய ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்திற்கும், வலுசக்தி அமைச்சு, நிலைபெறுதகு வலு அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிப நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.