அகில இலங்கை ஹய்யத்துல் குர்ஆன் நேர்முக தேர்வில் மாணவன் தெரிவு.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த செய்யது முகைதீன் ரியாசத் அல்ஹாபில் அல் ஆலிம் ரியாஸத் முகைதீன் #அஹ்மத் அவர்கள், அகில இலங்கை ஹய்யத்துல் குர்ஆன் நேர்முக தேர்வில் தெரிவாகி, தனது ஊருக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவன் தனது ஆரம்ப குர்ஆன் கல்வியைத் தனது தந்தையிடமே கற்றதுடன், 2019 ஆம் ஆண்டு பொத்துவில் #சபீலுர்ரஷாத் #அரபுக்கல்லூரியில் முழுக் குர்ஆனை மனனம் செய்து #ஹாபிழ் பட்டம் பெற்றார்.
தொடர்ந்து அதே கல்வி நிலையத்தில் ஆலிம் பிரிவைத் தொடர்ந்து பயின்று, 2026 ஆம் ஆண்டு #ஆலிம் பட்டத்துடன் வெளியேறியுள்ளார்.
மேலும், இவர் நாடு முழுவதும் கடந்த ஒரு தசாப்தமாக மனனப் பிரிவில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் அல் ஹாபிழ் #ரியாசத் ஹுமைதி அவர்களின் அன்புப் புதல்வரும், மறைந்த மர்ஹூம் U. L.S. முஹைதீன் அவர்களின் பேரனும் ஆவார்.
இம்மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்த சபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் ஒஸ்தாதுமார்கள், மற்றும் அதிபரும் பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவருமான M. #அப்துல்கையும் (அர்-ரஹீமி) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழிப்புணர்வூட்டும் சாதனைக்காக மாணவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்படுவதுடன், அல்லாஹ் அவர்களின் சேவைகளை கபூல் செய்து, மேலும் உயர்ந்த நிலைகளை அளிப்பானாக என Lanka Tamil FM/TV மீடியா சார்பில் துஆ செய்கிறோம்.