#மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் இன்று (2026.09.16) முற்பகல் இடம் பெற்றது.

மன்னார் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளையும் வசதிகளையும் மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் #600 #மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லாமல் திடீர் விபத்துச் சிகிச்சைகள் மற்றும் ஏனைய விசேட சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள இதனால் வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இத்திட்டம் நமது நாட்டின் இலவச சுகாதார சேவையைப் பிரதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகப் பாராட்டி, இதற்குப் பங்களிப்பு வழங்கிய இந்தியப் பிரதமர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்திற்கும், ஏனைய அனைத்துத் தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.