பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு பொத்துவிலில் வரவேற்பு

(நூர்தீன் பௌசர்)

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்

(ஓய்வு) டாக்டர் மய்யார் நசீர் அவர்களின் பொத்துவில் விஜயத்தை முன்னிட்டு, பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம். முஷர்ரப் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, பொத்துவில் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கலாநிதி டாக்டர் ஹாரூன்,கௌரவ பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், ஜமியத்துல் உலமா சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் தூதரகம் மற்றும் பொத்துவில் மக்களுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சமூக நலன்களை முன்னிறுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது சிறப்பம்சமாகும்.