#அனோஜனின் விடுதலைக்காக #பொத்துவிலில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.

(நூர்தீன் பௌசர்)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுதலை செய்வதற்கான கோரிக்கையை முன்வைத்து, பொத்துவில் #இன்ஸ்பெக்டர் #ஏத்தம் பகுதியில் இன்று (23.09.2026) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் #ஜெகன் அவர்களின் முயற்சியின் பிரகாரம் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகிறது.

அனோஜனுக்கு பொது #மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்யுமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரும் வகையில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துகள் பெறப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்படும் கையெழுத்துப் பிரதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனோஜனின் விடுதலைக்கான இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.