2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, இன்று (2026.09.24) #அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்தனர்.
கடல்சார் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடல் வளங்களை பாதுகாத்தல் மற்றும் கடலோரப் பகுதிகளை தூய்மையாகப் பேணுதல் தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Clean Sri Lanka Secretariat உடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “#Aththamā” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிகழ்வுகளை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஏற்பாடு செய்கிறது.
கடல் மாசுபாட்டை குறைத்து, கடல்சார் வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.