பொத்துவில் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவி #குமார்யனிஸ்கா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த 2026.03.10ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில், கமு/திகோ பொத்துவில் #மெதடிஸ்த #தமிழ்மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி பயின்ற மாணவி குமார் யனிஸ்கா, தனது சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
2019/2020 கல்வியாண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட இவர், Bachelor of Arts Honours in Translation Studies (English/Tamil) எனும் இளங்கலைமாணி (சிறப்பு) பட்டத்தைப் பெற்றுள்ளார்.
#பொத்துவில்பிரதேசத்தில் மொழிபெயர்ப்புக் கற்கையில் இவ்வகையான சிறப்புப் பட்டத்தைப் பெறும் #முதலாவதுமாணவி என்ற #பெருமையை குமார் யனிஸ்கா பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கல்விப் பயணத்தின் ஊடாக பொத்துவில் மண்ணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ள குமார் யனிஸ்காவின் சாதனை, எதிர்கால மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இவரது கல்விச் சாதனைக்காக பொத்துவில் மக்கள் சார்பிலும், Lanka Tamil FM/TV சார்பிலும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னும் பல உயரங்களைத் தொட்டு, கல்விப் பணியிலும் சமூகப் பணியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!
இம்மாணவிக்கு #Comments மூலம் உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் நண்பர்களே
(நூர்தீன் பௌசர்)