#அஷ்ரப்கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான கௌரவ SMM.MUSSARAFF அவர்களின் தலைமையில் அஷ்ரப்கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (2026.10.23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கௌரவ MS.ABTHULWAZEETH, பிரதேச சபையின் உப தவிசாளர் A.Mafeer, கௌரவ உறுப்பினர்கள், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச மத்திய குழு செயலாளர் B.Bascorkhan மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், எதிர்வரும் 2026/10/30, 31 மற்றும் 2026/11/01 திகதிகளில் பொத்துவில் பிரதேசத்தில் இச்சுற்றுப் போட்டியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஏற்பாட்டுக் குழுவும் இக்கலந்துரையாடலின்போது உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டது.
விளையாட்டின் ஊடாக இளைஞர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இச்சுற்றுப் போட்டி முன்னெடுக்கப்படவுள்ளது.
நன்றி!
உத்தியோக பூர்வ ஊடக அனுசரனை Lanka Tamil FM/TV
நேரலை வழங்கவுள்ளது.
-பதிவு பிரிவு-
B.Basoorkhan